tamilnadu

img

கோவை: மத்திய அரசு ஊழியர்களுக்கான நல மையம் தொடக்கம்!

கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவமனை நல மையம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து உரையாற்றினார். ஒன்றிய சுகாதார துறை இணையமைச்சர், ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் காணொளி மூலம் கலந்து கொண்டனர். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் பேசிய பி.ஆர்.நடராஜன், இந்த மையம் கோயம்புத்தூருக்கு வரவேண்டும் என்று 12 ஆண்டுகளாக முயற்சித்து வந்ததாகவும், கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த 8000 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் இதனால் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்தார். அதோடு பல்நோக்கு மருத்துவமனைகள் விரைவில் இணைக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாகவும், இந்த மையத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருத்துவ பிரிவுகளும் துவங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தயுள்ளதாக தெரிவித்தார்.