tamilnadu

img

மார்ட்டின் காசாளர் மர்ம மரணம்: விசாரணை துவக்கம்

கோயம்புத்தூர்:

கோவையில் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர் புடைய இடங்களில் வருமான வரிச்சோதனை நடந்துகொண்டிருந்த வேளையில், அவரது நிறுவன காசாளர்பழனிச்சாமி கடந்த 3ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 


இதில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தார் உயர்நீதிமன்றத்தை நாடவே, நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க, கோவை நீதித்துறை நடுவர் ராமதாஸ் நியமிக்கப்பட்டார்.அவர் புதன் காலை கோவை அரசு மருத்துவமனையில்விசாரணையை துவக்கினார். பிணவறையில் பாதுகாக்கப்கட்டுள்ள பழனிசாமியின் உடலை பார்வையிட்ட அவர் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தார்.