tamilnadu

img

அர்ஜூன் சம்பத் மகனுக்கு நீதிமன்றக் காவல்!

கோவை,நவம்பர்.14- இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நவம்பர் 28 தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஈஷா மையம் குறித்த செய்திகளை வெளியிட்ட நக்கீரன் வார இதழை  கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில தலைவர் ஓம்கார் பாலாஜி நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுக்க வேண்டும் என பேசி இருந்தார்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி சார்பில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில் ஓம்கார் பாலாஜி நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கோவை, 3 வது குற்றவியில் நடுவர் நீதிமன்ற நீதிபதி நவம்பர் 28 தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டுள்ளார்.