ஜெனீவா:
உலக சுகாதார நிறுவன தலைவரான டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம்சென்றாக வேண்டும். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை குறிவைத்து தாக்குவது கவலை யளிக்கிறது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மாஸ்கோவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் சிறப்பு பேட்டியில், கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அச்சுறுத்தலாகத்தான் தொடர்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், இரண்டாவது அலையாக வந்து தாக்கும் வாய்ப்பு இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.