tamilnadu

திருப்பூர் , அவிநாசி மற்றும் உடுமலை முக்கிய செய்திகள்

பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச்  சட்டங்களை முறையாக அமல்படுத்துக

ஆட்சியரிடம் சிஐடியு கோரிக்கை

 திருப்பூர், ஜூன் 26 - திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும்  பனியன் தொழிற்சாலைகளில் தொழி லாளர் நலம் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை முறையாக அமல்படுத்து வதை உறுதிப்படுத்துமாறு பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் கே.எஸ். பழனிசாமியிடம் திங்களன்று சிஐடியு  சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள் ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பனியன் தொழிற் சாலைகளில் பெரும்பான்மையானவை தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்தாமல் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. சம்பளப் பட்டியல், வருகைப் பதிவேடு பராமரித்தல் போன்ற எளிய விதிகள் கூட  பின்பற்றப்படுவதில்லை. மேலும் வார விடுமுறை வழங்க மறுப்பது, மிகை நேரச்  சட்டத்திற்கு முரணாக, தினசரி 12 மணி  நேரம் முதல் 16 மணி நேரம் வரை தொடர்ச் சியான பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது, அரசு விடுமுறை நாட் களில் விடுமுறை அளிக்காமல்  முன்னனு மதியின்றி வேலை செய்வது மற்றும் சட்ட  விரோத காண்ட்ராக்ட் முறையிலும் இயக் கப்படுகின்றன. காண்ட்ராக்ட் மற்றும் பீஸ்ரேட்  முறையில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு போனஸ் சட்டம் மற்றும் இஎஸ்ஐ,  பிஃஎப் திட்டத்தை அமலாக்க மறுப்பது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் பனியன் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களைச்  சந்தித்து வருகின்றனர்.  இது குறித்து அரசின்  கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்ற  போதும் தொழிலாளர் சட்ட அமலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே அனைத்து பனியன் தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்தவும், அமலாக் கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட  நடவடிக்கை எடுத்து தொழிலாளர் நலன் களைப் பாதுகாத்திட வேண்டும் என  அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, ஜூன் 26- அவிநாசி அடுத்த வஞ்சிபாளையத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு சாலையை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் பகுதி யிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலை விற்கு சாலையை அகலப்படுத்தும் பணி பல  மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற் கிடையே தனியார் கைபேசி நிறுவனம் சாலையில் கேபிள் பதிக்கும் பணியும் நடை பெற்று வருகிறது. இதனால் கடந்த வாரத்தில் மட்டும் ஆறு விபத்துகள் இச் சாலையில் நிகழ்ந்து உள்ளது.   இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாலையை அகலப்படுத்தும் பணி பல மாதங்களாக நடைபெற்று வரு கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  எனவே சாலை  அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சாலையை அகலப்படுத்தும் பணி புதன்கிழமை முதல் துவங்கியிருக்கிறது விரைந்து முடித்து விடுவோம் என தெரி வித்தனர்.

சுயஉதவிக்குழு நடத்தும் ரேசன்கடையை சீர்குலைக்க  ஆளும்கட்சியினர் முயற்சிப்பதாக ஆட்சியரிடம் புகார்

திருப்பூர், ஜூன் 26 – திருப்பூர் பிஎன் ரோடு, போயம் பாளையம் மேற்கு கங்காநகர் பகுதியில் கஸ்தூரிபாய் மகளிர் சுயஉதவிக்குழுவினர் நடத்தி வரும் ரேசன் கடையை சீர்குலைக்க ஆளும்கட்சியினர் முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாயன்று ஆட்சி யரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாநகரம் 30 வது வட்டம் பி.என்.ரோடு போயம்பாளையம் மேற்கு கங்கா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக கஸ்தூரிபாய் மகளிர் சுயஉதவி குழுவினர் ரேசன்கடையை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியை சேர்ந்த சில நபர்கள் இந்த பொது விநியோக கடை சரிவர நடப்பதில்லை  என்று பொய்யான தகவல்களை கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் சுய லாபத்துக்காக ஆளும் கட்சியினர் தொடர்ந்து செயல்படு கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் விசாரணை நடத்தி கங்கா நகர் பகுதியில் கஸ்தூரி பாய் மகளிர்  சுயஉதவி குழு ரேசன் கடை தொடர்ந்து சிறப் பாக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்று  மனுவில் கூறப்பட்டுள்ளது.

சாலையோர மரங்கள் திடீர் காய்ந்து போகும் மர்மத்தை கண்டறிய பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை, ஜூன் 26- சாலையோரங்களில் உள்ள பழமை யான மரங்கள் திடீரென பசுமை இழந்து  பட்டுப்போய்விடுகிறது. உண்மையான  காரணத்தை கண்டறிய நெடுஞ்சாலைச் துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.   . உடுமலை, மடத்துக்குளம் பகுதி சாலை களில் இருபுறங்களும் பல ஆண்டுகள் பழமையான வேப்பம், புளிய மரம் மற்றும் அரசமரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பல ஆண்டுகளாக பசுமையாக காட்சியளித்தது.  இந்நிலையில், திடீர் பட்டுபோய் பசுமை  இழந்து காணப்படுகிறது. இது பொது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.   இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக  ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலை, மடத்துக்குளம் சாலை இருபுறங்களிலும் பழமை வாய்ந்த மரங்கள் இருந்தன.தற் போது சில சுயநல மனிதர்களால் அழிக் கப்பட்டு வருகின்றன. இவர்கள் மரங் களில் ஓட்டை போட்டு அதில் அமிலத்தை ஊற்றி விடுகிறார்கள் இதனால் மரம்  சில மாதங்களில் பட்டுபோய் காய்த்து  விடுகிறது. இதன்பின் நெடுஞ்சாலைத் துறை அனுமதியோடு அம்மரங்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் விற்பனையாளர்களும் இதே போன்று மரங்களை அழிப்பு வேலை களை செய்கின்றனர். தங்கள் விற்பனை செய்ய உள்ள இடத்திற்கு அருகாமையில் இருந்தால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதுகின்றனர்.  இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்வது இல்லை. எனவே, வரும் காலங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் வர வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள்  மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை  விடுத்துள்ளனர்.