கோவை, ஆக.14- குடிநீரை தனியார் விநியோ கிக்கும் சூயஸ் திட்டத்தை முந்தைய அதிகாரிகளே கொண்டு வந்ததாக கோவை மாநகராட்சி ஆணையர் மழுப்பலான பதில ளித்து நழுவியது பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி அலுவல கத்தில் புதனன்று கோவை மாநக ராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசு கையில், கோவை மாநகராட்சி யில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சவாலான ஒன்றாக இருக் கிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை பொது மக்கள் பிரித்து கொடுக்க வேண் டும். ஆனால் இதனை மேற்கொள் வதில்லை. மக்கள் வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பைகளை முடிந்தளவு அவர்களே மறுசுழற்சி செய்யவும், முடியாத பட்சத்தில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து கொடுங்கள் என்று வலியு றுத்தி வருகிறோம். மேலும், குப்பை போடும் மக்க ளிடம் வரி வாங்க வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. இதன்படி விரைவில் குப்பை வரி வாங்குவோம். வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை நடைபெறுவது போல மாநகரில் 51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும். திடக்கழிவு மேலாண்மை 2016 சட்டத்தின்படி, குப்பை வரி வசூலிக்கும் நடைமுறை இந்தியா வில் பல மாநிலங்களில் உள் ளது. ஆகவே இங்கும் அதனை நடைமுறைப்படுத்த உள்ளோம் என்றார். இதேபோல், மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்க மலக்குழியில் உள்ள அடைப்பு களை சரிசெய்ய கோவை மாந காட்சி மூன்று ரோபோ இயந்தி ரங்களை வாங்க உள்ளது. ஒரு இயந்திரத்தின் விலை ரூ.17 லட்சமாகும். இரண்டு இயந்திரங் களை எச்பிசிஎல் நிறுவனம் வாங்கி தரவுள்ளது. ஒரு இயந்தி ரத்தை மாநகராட்சியின் செலவில் வாங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி மீண்டும் ஏற் படாதவாறு மழைநீரை சேமிக் கும் வகையில் அனைத்து வகை யான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல் படுத்த ஒவ்வொரு வார்டுக்கும் 3 தனி நபர் குழுக்கள் அமைக் கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்புக்கான கெடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி (இன்று) வரை மட்டுமே அனுமதி. இனி மழைநீர் சேமிக்காத அனைத்து வகையான கட்டிடங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 8 குளங்கள் மற்றும் குறிச்சி குளங்கள் தூர்வாரப்பட்டு உள் ளது. குளங்களில் கழிவுநீர் கலக் காத வகையில் 3 கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையத்தை பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக் கவும், வீடுகளில் பாதாள சாக் கடை திட்டத்தை இணைக்கவும், ஏற்கனவே ஒண்டிப்புதூர், உக் கடம் பகுதியில் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க ஏற் பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார். இதனைத்தொடர்ந்து செய் தியாளர்களின் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களுக்கு வரும் கழிவுநீரை இயற்கையாக சுத்திகரிப்பு செய்வதற்கான நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செங்குளம் குளத்திற்கு வரும் நீர் தடுக்கப்படுகிறது என்பது வதந்தி என்றும், பெரிய குளத்தின் கரை யின் உயரம் குறைக்கப்படுவது என்பதும் தவறு. நொய்யல் ஆறு நீர் நகரின் குளங்களுக்குதானாக வரும் வகையில் அமைப்பு உள்ள தால் குளத்திற்கு வரும் நீர் தடுக் கப்பட வாய்ப்பில்லை. மேலும், வறட்சி காலத்தில் 24 மணிநேரமும் சூயஸ் எப்படி குடி நீர் விநியோகம் செய்யும் என்கிற கேள்விக்கு, சூயஸ் குறித்து வதந்தி கள் பரவி வருகிறது. 24 மணி நேர தண்ணீர் விநியோகம் கொடுக்க முடிவதற்கான உட்கட்டமைப்பு வசதி மாநகராட்சியிடம் இருக் கிறது. வரி உயர்வு இருக்கப்போவ தில்லை. நீரின் அளவை கணக்கு செய்வதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளதால் அதனை கண்காணிக்கவே சூயஸ் திட்டம் என்றார். அடுத்தடுத்த சூயஸ் குறித்த கேள்விகளுக்கு திணறிய ஆணை யர் இது முந்தைய அதிகாரிகள் போட்ட திட்டம். அவர்கள் கலந்தா லோசித்துத்தான் முடிவெடுத்தி ருப்பார்கள். இருப்பினும் சூயஸ் குறித்து விரிவாக விவாதிக்க ஒரு கூட்டத்திற்கு மாநகராட்சி ஏற் பாடு செய்யும் என சூயஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடி யாமல் நழுவினார்.