கோவை, ஜூலை 22 - கோவில்கள் மீது தீ வைப்பு, பெரியார் சிலை அவமதிப்பு உள்ளிட்ட விரும்பத்தகாத சம்ப வங்களால் கோவை மாவட்டத் தின் அமைதியை சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதற் றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது இம் மாவட்டத்தின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் கேடு விளை விப்பதாக உள்ளது. இத்தகைய சம்பவங்களை காவல்துறை உறு தியான நடவடிக்கைகளின் மூலமாகக் கட்டுப்படுத்த வேண் டுமென்று வலியுறுத்துகிறோம். மேலும், இத்தகைய சீர்குலை வுகளுக்கு எதிராக ஜனநாயக இயக்கங்களும், சமூக அமைப்பு களும் குரல் எழுப்பிடவும் வேண் டுகிறோம். குறிப்பாக, கடந்த மாதம் கோவை சலிவன் வீதியில் உள்ள வேணுகோபால் கிருஷ்ணசாமி கோவில் மற்றும் ராகவேந்திரா திருக்கோவில் ஆகியவற்றின் முன்பு பன்றி இறைச்சி வீசப்பட் டது. இதில் ராம்பிரகாஷ் என்ப வரை காவல்துறை கைது செய்துள் ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை அவம திப்புக்குள்ளாக்கப்பட்டது. இச் சம்பவத்தில் அருண்கிருஷ் ணன் என்பவர் கைது செய்யப் பட்டிருக்கிறார். இதேபோல் கஜேந்திரன் என்பவர் கோவை யின் முக்கியப் பகுதிகளில் உள்ள நான்கு கோவில்களுக்கு தீ வைத் துள்ளதாக கைது செய்யப்பட்டி ருக்கிறார். இந்த சம்பவங்கள் கோவையில் மிக மோசமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து கோவில்களை சேதப்படுத்திய இருவரும் எந்த ஒரு அரசியல் அமைப்பையோ, சமூக அமைப்புகளையோ சாரா தவர்கள், மனநிலை பாதிக்கப்பட் டவர்கள் என்று வழக்கைக் கொண்டு செல்கிறது காவல் துறை. ஆனால், இத்தகைய செயல் களை கோர்வைப்படுத்திப் பார்த் தால் காவல்துறை சொல்வது நம் பும் படியாக இல்லை. இதுவே, பொதுமக்களின் கருத்தாகவும் உள்ளது. எனவே, மாநில அரசு இச்சம்பவங்கள் குறித்து ஒரு உயர் நிலை விசாரணையை நடத்தி மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோருகிறோம். மேலும், கோவை மாவட்ட நிர்வாகம் இச்சம்பவங் களை சட்டம் ஒழுங்கு பிரச்சனை யாக மட்டும் பார்க்காமல் பொது அமைதிற்கு கேடு விளைவிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தா லும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.