tamilnadu

img

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு

ஈரோடு, ஜன. 18- ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மூன்று மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அணையானது கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. கீழ்பவானி திட்ட பிராதன வாய்க்காலில் முதல் போக பாசனம் முடிந்து கடந்த ஜன. 9ஆம் தேதியன்று விநாடிக்கு 2200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  இதன் காரணமாக கடந்த ஜன. 9ஆம் தேதி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 105 அடியாக இருந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மெல்ல சரிய தொடங்கியது. இந்நிலையில் வெள்ளியன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 368 கனஅடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 103.66 அடியாக வும், நீர் இருப்பு 31.6 டிஎம்சியாகவும் உள்ளது. அணை யிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 500 கனஅடிநீரும் வெளியேற்றப் படுகிறது. கடந்த 8 நாட்களில் அணையின் நீர்மட்டம் ஒள்றரை அடி சரிந்துள்ளது.