tamilnadu

img

கோவை உட்பட நாடு முழுவதும் 14 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்

அன்று


கோவை உட்பட நாடு முழுவதும் 14 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் அமைக்க 2008இல் யுபிஏ-1அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதற்காக 1750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து 21.5.2012 அன்று பி.ஆர்.நடராஜன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி பதிலளிக்கையில் மாநில அரசு இதற்காக 500 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டும் என்றார். 


இன்று


இந்த பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான திட்டம் மோடி அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்கனை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவையே களைக்கும் மசோதாவை மோடி அரசு நிலுவையில் வைத்துள்ளது. மத்தியப் பல்கலைக் கழகங்கள் உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளுக்காக HEFA அல்லது RISE மூலம் கடன் பெற வேண்டும். இந்தக் கடனைத் திருப்பிக் கட்ட கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.