கோபிசெட்டிபாளையம், ஆக. 28- கோபிசெட்டிபாளையம் அருகே மாநில அளவிலான சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வேளாண்மை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு புதனன்று நடைபெற்றது ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் தனியார் கலைக் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையின் சார்பில் மாநில அளவிலான சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வேளாண்மை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி தலைமையில் நடை பெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் காசியண்ணன் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு என்ற தலைப்பில், ஓசை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலை வர் காளிதாசன் சிறப்புரையாற்றினார். இயற்கை வேளாண்மைப் பாதுகாப்பு என்ற தலைப்பில் தமிழ்நாடு உழவர் தொழில் நுட்பக் கழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயி சுந்தரராமன் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து வேளாண்மை உற்பத்தியில் வானொலி நிலையத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில், கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி அமைப்பாளர் சரவணன் உரை யாற்றினார். வேளாண்மை உற்பத்தியில் வங்கிகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் தேசிய வங்கியின் முதுநிலை மேலாளர் தீபன் விளக்கவுரை நிகழ்த்தினார். மேலும் இக்கருத்தரங்கில் வேளாண்மை யில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித் தும், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்தும், இயற்கையை பாதுகாப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட் டன. இதைத்தொடர்ந்து வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் வனப்பகுதியையும் பாதுகாக்க வேண்டும். வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களி னால் தான் வனங்கள் பாதுகாக்கப்படுகிற தெனவும் விளக்கப்பட்டன. இக்கருத்தரங் கில் ஈரோடு மாவட்ட உழவர் விவாதக் குழு அமைப்பாளர்கள் சங்கத்தினர், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை விவ சாயிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாண விகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.