tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர்கள்

அவிநாசி, ஜன. 3- திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவிநாசி ஒன்றியம் 19வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி யிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற் றுள்ளனர். திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி மன்ற தலைவருக்கு நடைபெற்ற தேர்தலில் 4870 வாக்குகள் பதிவானது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கே.கணேசன் 2247 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார், இவரை எதிர்த்துப் போட்டி யிட்ட   வேட்பாளரை விட 1008 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார்.  2வது வார்டில் சர்மிளா, 3வது வார்டில் ஆர்.ஈஸ்வரி, 6வது வார்டில் பி.ஈஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.    இதேபோல், புதுப்பாளையத் திற்குட்பட்ட அவிநாசி ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு கவுன் சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்துசாமி போட்டியிட்டார். இந்த வார்டில் 4792 வாக்குகள்  பதிவான நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்துசாமி 2571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஊத்துக்குளி ஒன்றியம், புஞ்சை தளவாய்பாளையம் ஊராட்சி தலைவராக சி.பி.எம். சார்பில் பழனியம்மாள், 5ஆவது வார்டு உறுப்பினராக கே.வெங்கடாசலம், 4ஆவது வார்டில் தேவிராணி, 9 ஆவது வார்டில் நித்யா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வூ ராட்சியில் 1வது வார்டில் மைதிலி மற்றும் 2வது வார்டில் ராதா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  நடுவச்சேரி ஊராட்சியில் 1  வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ரங்க சாமி 126 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  புதுப்பாளையம் ஊராட்சி மன்ற 11 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவிகா மோகனசுந்தரம் 165 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட புதுப்பாளையம் முன் னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் 165 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றுள்ளார். 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட குமார வேல் 187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற 11வது வார்டு உறுப்பினராக ராயன் 99 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல 8 வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக பேபி 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றுள்ளார்.

ஒன்றிய வார்டுகள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 170 வார்டுகளுக்கான முடிவுகள் அறி விக்கப்பட்டது. இதில் திமுகவின் சார்பில் 70 பேர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாகத் வெற்றி பெற் றுள்ளனர்.