ரயில்வே துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி நன்றி
கோவை, ஜன. 10 – தென்மாவட்ட மக்கள் பயன் பெரும் வகையில் பொங்கல் விழா விற்கு சிறப்பு ரயில் விட வேண் டும் என்கிற கோரிக்கையேற்று உடனடியாக அதற்கான உத்த ரவை பிறப்பித்த ரயில்வேத் துறைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார். சேலம் ரயில்வே கோட்டத்திற் குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பி னர்கள், ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சேலத்தில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி (செவ்வாயன்று) நடை பெற்றது. இதில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இதில் முக்கியமாக தென்மாவட் டங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில் விட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத் தார். இதனையேற்று கோவையி லிருந்து பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்குவதற்கான உத்தரவை ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதன்படி ஜனவரி 14 மற்றும் 16 ஆம் தேதி கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் கூறுகையில், பொங்கல் உள் ளிட்ட முக்கிய விழா நாட்க ளில் கோவையில் உள்ள தென்மா வட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசல் காரணமாக மக் கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதனை சாதகமாக்கிக் கொண்டு தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடு கின்றனர். இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு தமிழர் திரு நாளை சொந்த ஊரில் கொண்டா டுவதற்கு ஏதுவாக பயணச்சிர மமின்றி செல்ல இக்கோரிக் கையை ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் அழுத்தமாக முன் வைத்தேன். கோரிக்கையின் நியா யத்தை உணர்ந்த ரயில்வேதுறை உடனடியாக கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக ரமேஸ்வ ரத்திற்கு இரண்டு சர்வீஸ் என் கிற அடிப்படையில் நான்கு நாட்க ளுக்கு இந்த சிறப்பு ரயிலை இயக்க உத்தரவிட்டிருப்பது உண்மை யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. மக்களின் தேவை உணர்ந்து இச்சேவையை வழங்கிய ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கோவை மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன் என தெரிவித்தார்.