பொள்ளாச்சி, ஜூன் 11- பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திற்கு சொந்தமான காலியாக உள்ள பழைய குடியி ருப்புகளை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் அமைந் துள்ளது. இதன் அருகிலேயே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய வீட்டு வசதி வாரிய குடியி ருப்பு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை யில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இதனையடுத்து பழைய குடியிருப்புகளிலிருந்த அரசு ஊழியர்கள் சிலர் புதிய குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது அந்த பழைய குடியிருப்புகளில் சில பகுதி கள் சேதமடைந்து பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து காலிக் கட்டிடங்களாக கேட்பாடற்று காட்சியளிக்கிறது. இது குறித்து வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் பொறியாளர்களும் கண்டு கொள்வதில்லை. இதனால் அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் எந்த வித பயனு மில்லை. எனவே, இக்குடியிருப்புகளை அரசின் பயன்பாட்டிற்கோ அல்லது வீடுகளின்றி தவிக்கின்ற ஏழை எளிய மக்களுக்கோ பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண் டுமென தெரிவித்துள்ளனர்.