பொள்ளாச்சி, செப். 15- பொள்ளாச்சியில் ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள பழைய கட்டிடங்களை இடிக்க வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், செட்டிவீதியில் சமீ பத்தில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததையடுத்து, கோவை மாவட்டத்தில் பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கப்பட வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவை மதிக்காமல், பொள்ளாச்சி - உடு மலை சாலை, மகாலட்சுமி நகரில் பழுத டைந்த அஞ்சல் அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும், வரு மான வரி அலுவலகம் அருகே உள்ள காவ லர் குடியிருப்புகளும் இடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது பருவ மழை தீவிரமடைந்து வருவதால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தவிடுமோ என அப்ப குதி மக்கள் அஞ்சமடைந்துள்ளனர். எனவே, பொள்ளாச்சி பகுதியில் சிதில மடைந்த அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பயன் பாடற்ற கட்டிடங்களை உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.