திருப்பூர், செப். 17 – கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் செவ்வாயன்று இத்தொகு திக்கு உட்பட்ட திருப்பூர் ஒன்றிய மற்றும் மாநகரப் பகுதிகளில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டணி கட்சித் தலை வர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணி சார்பில் கோவைத் தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியி டுட்டு வெற்றி பெற்றார். இந்நிலை யில் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள திருப்பூர் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரி வித்து பி.ஆர்.நடராஜன் செவ் வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இடுவாய் ஊராட்சி சீராணம் பாளையத்தில் இந்த நன்றி அறி விப்பு சுற்றுப் பயணம் தொடங்கி யது. இடுவாய், மங்கலம் ஊராட்சி களைச் சேர்ந்த கிராமப்புறங்க ளிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிபாளையம், இடுவம் பாளையம், வீரபாண்டி, முத்த ணம்பாளையம் உள்ளிட்ட மாந கரப் பகுதிகளிலும் மற்றும் முத லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலும் என சுமார் 70 மையங்களில் அவர் மக்க ளைச் சந்தித்து நன்றி தெரிவித் தார்.
பல்வேறு பகுதிகளில் பெண் கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்புக் கொடுத்தனர். அத்து டன் துண்டு, மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். பொது மக்கள் தங்களது அடிப்ப டைப் பிரச்சனைகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இந்த பயணத்தில் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் முருக சாமி, கோவிந்தராஜ், விஸ்வலிங் கசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றி யச் செயலாளர் சி.மூர்த்தி, காங்கி ரஸ் சார்பில் வே.முத்துராமலிங் கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அருணாசலம், வடிவேல், கொமதேக சார்பில் பொன்னு சாமி, விசிக சார்பில் ரங்கசாமி உள்பட தோழமை கட்சி நிர்வாகி கள் உடன் பங்கேற்றனர்.