tamilnadu

img

ரயில்வே தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 15 -  இந்திய பொதுத்துறை நிறுவன மான ரயில்வே துறையை தனியாருக்கு  தாரை வார்க்கும் மத்திய மோடி அர சைக் கண்டித்து புதனன்று வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மத்தியில் இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து  இந்திய பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயப்படுத்துதலில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கார்ப்ரேட்டுகள் கொள்ளையடிக்க ஏதுவாக இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கத்தை நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய குழு அறைகூவல் விடுத்தது.  இதன்ஒருபகுதியாக, கோவையில் ரயில் நிலையம் முன்பு வாலிபர் சங்கத் தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், மாவட்டத் தலைவர் ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் அர்ஜூன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர்

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத் தலைவர் பா.ஞான சேகரன், மாவட்ட நிர்வாகிகள் டி.சம் பத், எஸ்.அருள் மற்றும் அனீபா உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.  

ஈரோடு

ஈரோடு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத் தில் மாவட்டத்தலைவர் விஸ்வநா தன், மாவட்ட செயலாளர் சசி, மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.  

சேலம்

 சேலம் ரயில்வே கோட்ட அலு வலகம் மற்றும் சேலம் டவுன் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட தலைவர் பி.கந்த சாமி, மாவட்ட செயலாளர் பி.கணே சன், மாவட்ட பொருளாளர் வெங்க டேஷ், மாவட்ட செயற்குழு, மாவட் டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.