tamilnadu

img

அவிநாசி ஒன்றிய புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

அவிநாசி, ஜன. 6- அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திங்களன்று பதவி யேற்றார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜன.2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அவிநாசி ஒன்றியம் 19வது வார்டு உறுப்பினராக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்துசாமி வெற்றி பெற்றார்.  இந்நிலையில், திங்களன்று அவி நாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் புதிய உறுப்பினர்கள் பதவி யேற்பு விழா நடைபெற்றது. இதில் பி.முத்துசாமி ஒன்றிய கவுன் சிலராக பதவியேற்றுக்கொண்டார்.