கோபி, அக்.13- மத்திய பாஜக அரசின் தொழி லாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் பல்வேறு இடங்களில் பிரச் சாரம் பயணம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக ஆட் சிக்கு வந்த பின்னர் நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பண வீக்கம் அதிக ரித்துள்ளது. மக்களிடம் வாங்கும் சக்திகுறைந்துள்ளது. வேலையில் லாதோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சிறு, குறு, பெருந்தொழில்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. விசாயி கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி ஒவ்வொரு ஆண்டும் விவசாயிக ளின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பல்வேறு செயல்களால் மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். எனவே மத் திய பாஜக மோடி அரசு மக்கள் விரோத செயலைக் கண்டித்து இடது சாரி இயக்கங்கள் நாடுமுழுவதும் பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்ப் பாட்டகளை நடத்துவது என முடிவு செய்து பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இடது சாரி கட்சிகளின் சார்பில் பிரச்சார பயணத்தின் நோக்கம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்த னர். இப்பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.முனுசாமி தொடங்கி வைத்தார். தாலுகா தலைவர் கெம்புராஜ் முன்னிலை வகித்தார். சிபிஐ நிர்வாகி பரமேஸ்வரன் சிறப்புரை யாற்றினார். இப்பிரச்சார பயணத்தில், ரிசர்வ் வங்கியிலிருந்து தொகுப்பு நிதியை பொது முதலீட்டிற்கு பயன் படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரித்திட பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதுவரை வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்க ளுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதி யம் வழங்கிட வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இப்பிரச்சார பயணத்தில் இடதுசாரி இயக்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்ட னர். இதேபோல், ஈரோடு தாலு காவில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.நாச்சி முத்து தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் சி.முத்து, தாலுக கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர் கள் மற்றும் மாதர் சங்கம், சிறு பான்மை நலக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.