கோவை, ஆக.24- தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை யின் அறிக்கையை தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத னிடையே கோவை காருண்யா நகர் காவல்நிலையத்தில் சனியன்று சந் தேகத்தின்பேரில் இருவரிடம் விசா ரணை நடைபெற்று வருகிறது. மத்திய உளவுத்துறை அறிக் கையை தொடர்ந்து தமிழகம் முழுவ தும் காவல்துறை இரண்டு நாட்களாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவையில் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே மாவட்ட எல்லைக்குள் அனு மதிக்கப்படுகிறது. இந்நிலையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர் புடையதாக கருதப்படும் ஒருவர் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள் ளதாக தெரிகிறது. இவரிடம் நடத் திய விசாரணையை தொடர்ந்து கோவையில் இருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசார ணைக்காக அழைத்து சென்றனர். இவர்களை கோவை காருண்யா நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த இருவரில் ஒருவர் கேர ளாவை சேர்ந்தவர் என்றும், மற் றொருவர் கோவையைச் சேர்ந்தவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரி வித்துள்ளது. இதற்கிடையே, கோவை மாவட் டத்தின் எல்லையிலும், நீலகிரி மாவட் டத்தின் நுழைவு வாயிலாகவும் உள்ள மேட்டுப்பாளையத்தில் காவல்துறை யினர் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. பவானியாற்று பாலம் அருகே நிறுத் தபட்டுள்ள அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு படை காவல்துறையினர் கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதித்து வருகின்றனர். சென்னை சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி தற் போது மேட்டுப்பாளையத்தில் முகா மிட்டு பாதுக்காப்பு பணிகளை மேற் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் சனியன்று காலை சென்னையில் இருந்து தமிழ்நாடு கமாண்டோ படையினர் மேட்டுப் பாளையம் வரவழைக்கப்பட்டுள் ளனர். துணை கமாண்டர் நாகராஜ் தலைமையிலான இப்படையினர், வெடிகுண்டு தடுப்பு படையினர், மோப்ப நாய் பிரிவினர் ஆகியோரோடு மேட்டுப்பாளையத்தின் நகரவீதிகள் வீதிகளில் ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர்.
மலை ரயிலுக்கு பலத்த பாதுகாப்பு
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயிலில் பய ணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டு மின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரு வதால் மேட்டுப்பாளையம் ரயில் நிலை யத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. சனியன்று காலை வழக் கம் போல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நீலகிரி மலைரயிலில் பயணிப்போர் மற்றும் அவர்களது உடமைகள் மெட்டல் டிக்டேட்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டன. ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஒவ்வொரு பெட்டியாக ஏறி ஆய்வு நடத்தினர். இதன் பின் னரே மேட்டுப்பாளையம் ரயில் நிலை யத்தில் இருந்து சுற்றுலா பயணிக ளோடு மலைரயில் புறப்பட்டு சென் றது. நீலகிரி மலைரயில் கடந்து செல் லும் கல்லார், அடர்லி, ஹில்குரோவ் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.