tamilnadu

வாகன ஆய்வாளர் வீட்டில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை, மார்ச் 7- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, சூலூர் வட்டார போக்குவரத்து அலு வலக வாகன ஊர்தி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் காவல் துறையினர் சனியன்று அதிரடி சோத னையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இயக்க ஊர்தி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சித்ரா. இவர், ஓட்டுநர் உரிமம் வழங்குவது மற்றும் வாகனங்களுக்கு புதிய பதிவெண்கள் வழங்குவது போன்ற வற்றில் பெருமளவு லஞ்சம் வாங்கி வருவதாகவும், அதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வும் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மேலும், இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே மதுரை மாவட் டம், உசிலம்பட்டிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டும், இது வரை மாறுதல் செய்யப்பட்ட இடத்திற்கு செல்லாமல் இருப்பதாகவும் புகார்கள் வந்தன. இந்நிலையில், சூலூர் ரங்கநாதபுரம் அமர்ஜோதி நகரில் உள்ள சித்ராவின் வீட்டில் சனியன்று கோவையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல் துறையி னர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் பிரபு தாஸ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர்  இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் சிக்கியிருக்க லாம் என கூறப்படுகிறது.