கோவை, ஜூலை 23- சுதந்திர போராட்ட வீராங் கனை கேப்டன் இலட்சுமி ஷேக லின் நினைவு தினத்தை முன் னிட்டு, பொது சுகாதார கட்ட மைப்பை மேம்படுத்தக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பொது சுகாதாரத்தை மேம்ப டுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை மையங்களை வட் டார அளவில் அதிகப்படுத்தி பரி சோதனை செய்ய வேண்டும். தொற்று அதிகரிப்பிற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். மாநில அரசு கொடுத்த வாக்கு றுதியின் அடிப்படையில் சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக ஒருமாத சம்பளத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் இலட்சுமி ஷேகலின் நினைவு தினமான வியாழனன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, கல்வீரம்பாளையம், புலியகுளம், மாரி செட்டிப்பட்டி பதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, காட்டூர், திப்பம்பட்டி, ஆவாரம்பாளையம், பெரியநாயக் கன்பாளையம், வடக்கு காமராஜபு ரம் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதி மணி, மாநிலக்குழு உறுப்பினர் கள் ராஜலட்சுமி, சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், கொடி புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, நிர்வாகிகள் கே.சுசிலா, ரங்க நாயகி, மீனாட்சி, தமிழ்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக, சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், அந்தியூர், கிருஷ்ணாபுரம், பாலக்குட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் 250க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.