ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்
ஈரோடு, ஜூலை 4- ஈரோடு மாவட்டம், வ.உ.சி.பூங்கா மைதானத்தில் 22.08.2019 முதல் 02.09.2019 வரை நடைபெறவுள்ள இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசு கையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணு வத்திற்காக ஆள்சேர்ப்பு முகாம் வருகின்ற வருகின்ற 22.08.2019 முதல் 02.09.2019 வரை நடைபெற உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு முகாமில் சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்ட்ன்ட், சோல்ஜர் ஜெனரல் டிய10ட்டி, சோல்ஜர் கிளர்க்ஃஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இம்முகாமில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோயம் புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைவதற்கு ஏதுவாக www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 08.07.2019 முதல் 07.08.2019 வரை விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவு செய்தவர்கள் மட்டுமே இம்முகாமில் பங்கேற்க முடியும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து இம்முகாமிற்கு வரும் பொழுது கட்டாயம் கொண்டு வருவதோடு மேலும் உரிய ஆவணங்களையும் சேர்த்து எடுத்து வரவேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே இம் முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இம்முகாமில் பங்கேற்க வருகை தரும் விண்ணப் பதாரர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முழுமை யாக எற்படுத்திட வேண்டும். மேலும் தகவல்களுக்கு ‘Army Calling’ என்ற கைபேசி செயலி மூலமும், இந்திய ஆள்சேர்ப்பு அலுவலகம், கோயமுத்தூர் தொலைபேசி எண்.0422-2222022 என்ற முகவரி யிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.சக்திகணேசன் இந்திய ராணுவத்திற் கான ஆள்சேர்ப்பு இயக்குநர் கர்னல் ஆர்.ஜே.ரானே, மாநகராட்சி ஆணையாளர், மா.இளங்கோவன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதன்மை நிலை விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை
ஈரோடு, ஜூலை 4- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு விடுதி பிரிவில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் காலியாகவுள்ள 23 இடங்களுக்கு 2-வது கட்டமாக மாநில அளவி லான தேர்வுகள் ஜூலை 10 ஆம் தேதியன்று நடை பெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் தடகளம், (மாணவியர்) மேசைப்பந்து (மாணவியர்) ஜிம்னாஸ்டிக்ஸ் (மாணவர்) மற்றும் நீச்சல் (மாணவ / மாணவியர்) சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கில் டென்னிஸ் (மாணவர்) மற்றும் சென்னை நேரு பூங்கா விளையாட்டரங்க வளாகத்தில் இறகுபந்து (மாணவர்) விளையாட்டிலும் நடத்தப்பட உள்ளது. சிறுவர்களுக்கான இறகுபந்து போட்டி ஜவ ஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை யிலும், திருச்சி, விளையாட்டு விடுதியிலும் ஜிம் னாஸ்டிக்ஸ்,நீச்சல்,டென்னிஸ் போன்ற போட்டிகள் திருநெல்வேலி விளையாட்டு விடுதியிலும் நடை பெறவுள்ளது. சிறுமியர்களுக்கான தடகளம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திலும், மேஜைப்பந்து, நீச்சல் போன்ற போட்டிகள் ஈரோடு விளையாட்டு விடுதியிலும் நடைபெறவுள்ளது. முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாணவ/ மாணவியர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in எனும் இணையதளம் மூலம் 09.07.2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தல் வேண்டும். சென்னையில் மாநில தேர்வுகள் நடை பெறும் மையங்களில் 10.07.2019 அன்று காலை 8.00 மணி அளவில் விண்ணப்பதாரர்கள் நேரில் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலரை கைபேசி எண். 7401703490-ல் தொடர்பு கொள்ளலாம்.