tamilnadu

நுகர்வோருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விமான நிறுவனம்

கோவை, ஜூலை 11-   பயணச்சீட்டு உறுதி செய்வதில் அலட்சியம் காட்டியதாக விமான நிறுவ னத்திற்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க கோவை மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.அப்துல் ஜலீல் என்பவர் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர்கூறியிருப்பதாவது:- கோவையில் இருந்து அமெரிக்கா செல்லவும், அங்கிருந்து விமா னத்தில் திரும்பி வரவும் விமான நிறுவ னத்தில் முன்பதிவு செய்திருந்தேன். இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து திட்டமிட்டபடி 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி தில்லி வந்தடைந்த பின் னர், 30 ஆம் தேதி விமான நிறுவன கவுண் டரில் விசாரித்தபோது, தில்லியில் இருந்து கோவை வருவதற்கான எனது பயண சீட்டு உறுதி செய்யப்படவில்லை.

எனவே, காலை 7 மணிக்கு புறப்படும் விமானத்தில் நான் பயணிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதன்பின்னர் மீண்டும் காலை 8 மணிக்கு விசாரித்த போது உங்கள் டிக்கெட் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால் தவறுதலாக உறுதி செய்யப்படவில்லை என முன்பு ஊழியர் உங்களிடம் தெரிவித்துள்ளார் எனக் கூறி யுள்ளனர். இதனால், கடும் மன உளைச்சல் ஏற் பட்டதாகவும், பின்னர் வேறு வழி இல்லா மல் வேறொரு தனியார் நிறுவன விமானத் தில் ரூ. 9 ஆயிரத்து 731 செலுத்தி கோவை வந்தடைந்ததாக மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஆகவே, தில்லியில் இருந்து கோவை பயணிக்க செலவான தொகையை திருப்பி அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன  உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க வும் விமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனுவை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நீதிபதி ஏ.பி. பாலச்சந்திரன் வேறொரு விமானத் தில் பயணிக்க மருத்துவர் செலுத்திய ரூ. 9 ஆயிரத்து 731 மற்றும் 9 சதவித வட்டியுடன் திருப்பி அளித்திட வேண்டும் என்றும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் சேவை  குறைபாடுகள் இழப்பீடாக ரூ. 50 ஆயிர மும், வழக்கு செலவுக்காக ரூ. 3 ஆயிரமும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.