tamilnadu

img

நீர் மேலாண்மை பற்றி அக்கறையற்ற அரசு நிர்வாகம்

அந்தியூர், மே 16-வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள அந்தியூர் பகுதியில் பாரபட்சமின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த10 ஆண்டுகளாக போதுமான மழை பொழிவுஇல்லை. இதனால் முக்கியநீராதாரங்களான எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, சந்தியாபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி மற்றும் அந்தியூர்பெரிய ஏரி ஆகிய முக்கியநீர்நிலைகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டம் சுமார் 1500 அடிக்குகீழ் சென்று விட்டது. அரசு அமைத்த ஆழ்துளைகிணறுகளும் வறண்டு விட்டன. இதனால் குருவரெட்டியூர், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், கெட்டிசமுத்திரம், பச்சாம்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், சின்னதம்பிபாளையம், வேம்பத்தி, பிரம்மதேசம், அந்தியூர் நகரம் உள்ளிட்டஅந்தியூர் வட்டத்தின்பெரும்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கால்நடைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் விநியோகத்திலும் பாரபட்சம் காட்டப்படுகிறது.இதனால்தலித் குடியிருப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள்இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லையெனகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் குடிநீர் விநியோகிக்கப்படும் குழாய்களில் ஏற்படும் உடைப்புகள்மற்றும் மின் மோட்டார்பழுதுகள் உடனடியாக சரிசெய்யப்படுவதில்லை.குடிநீர் தொடர்பான புகார்கள் போர்க்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். மேட்டூர், பவானி சாகர் அணை உபரி நீரைக்கொண்டு அந்தியூர் பகுதிக்கு திருப்பி விட வேண்டும். நீர் மேலாண்மை பற்றிய தேவையான அக்கறையுடன் அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.