பொள்ளாச்சி, ஜன.12- பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திரு விழா சனியன்று தொடங்கப்பட்ட நிலை யில் நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து கொண்டு வரப் பட்ட வெப்பக் காற்று பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஜனவரி மாதம் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த பலூன் திருவி ழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்நிலையில், 6ஆவது ஆண்டாக சர் வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள ஒரு மைதா னத்தில் சனியன்று தொடங்கியது. இதில் நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 வெப்பக்காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டன. அதிகாலையில் காற்று குறைவான நேரத்தில் பலூன்கள் வானில் பறக்க விடப்படும் என்றும்,மாலை நேரங்களில் பலூன்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி கள் நடத்தவுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் தெரிவித்தனர் . இத்திருவிழா வரும் ஜன 15ஆம் தேதி வரை நடைபெறகிறது. மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சி கள் நடக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பலூன் திருவிழாவானது கண்காட்சியாக மட்டுமே எங்களால் அனுப விக்க முடிகிறது. ஒரு நபருக்கே ரூ.20 ஆயிரம் வரை டிக்கெட் விலை தீர்மானிக் கின்றனர். நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த எவ ரும் இதனை அனுபவிக்க முடியாது. இந்த ஆடம்பர பலூன் திருவிழாவினால் வெறும் 5 சதவிகித மக்களை திருப்திப்படுத்த முடியும். ஏனென்றால் இங்கு பெரிய தொகை செலவு செய்து பலூன்களில் பறக்க மக்கள் அதிகம் விரும்புவதில்லை. இனிவரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் பலூன்களில் பயணிக்கின்ற வகையில் கட்ட ணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.