அவிநாசி, ஜூலை 19- அவிநாசி பேரூராட்சி சார்பில் துப்புரவுத் தொழி லாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு முகாமில் (ஸ்மார்ட் சிட்டி) பேரூராட்சி அமைப்பது குறித்தும், சாலைகளை தூய்மையாக பராமரிப்பு குறித்தும் விளக்கப் பட்டது. இதில் துப்புரவுத் தொழிலாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கு பேரூராட்சி நிர்வாகி கருப்புசாமி தலைமை வகித்தார். இதில் ஜெ.கென்னடி விளக்க உரையாற்றினார்.