கோவை, ஜூலை 21- கோவை வெள்ளியங் கிரி மலையில் இறைவன் அழைத்ததாக கடிதம் எழுதி, இளைஞர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்ற னர். தற்போது கொரோனா ஊரடங்கு தடையால் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
இந்நிலை யில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவன் என்பவர் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று இறை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளார். இதன்படி, வெள்ளிங்கிரி மலைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சுமார் எட்டு நாட்களுக்கு முன்பு வீட்டியிலிருந்து மகாதேவன் கிளம்பி யுள்ளார். ஆனால், இதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடி யாததால், மகாதேவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரது செல் போன் எண் மூலம் நடத்திய விசாரணையில் அவரது அலை வரிசை கடைசியாக வெள்ளிய்ங்கிரியை அடுத்த இருட்டு பள் ளத்தில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆலந்துறை காவல் துறையினர் வனத்துறையினரின் உதவியு டன் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் மரத் தில் தூக்கிட்டு மகாதேவன் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இவரிடமிருந்த கடிதத்தில் தன்னை இறைவன் அழைத்துள்ளதாகவும், எனது மரணத்திற்கு யாரும் கார ணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஏழாவது மலை யில் இருந்த மகாதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.