tamilnadu

img

அவிநாசி ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக

திருப்பூர், ஆக. 5 – அவிநாசி அரசினர் ஆதிதிராவிடர் நல விடுதியில் மாணவிகளை தண்ணீர் தொட்டியை சுத்திகரிக்க வைத்த விடுதி காப்பாளர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரியுள்ளது. திங்களன்று மாவட்ட ஆட்சியர கத்தில் நடைபெற்ற வாராந்திர குறை தீர்க் கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், தேசிய தாழ்த்தப்பட் டோர் இயக்க நீலமலை முத்துசாமி உள்ளிட்டோர் இதுகுறித்து மனு அளித்தனர். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இப்பிரச்சனை யில் தலையிட்டு, மேற்படி விடுதி யில் பணியாளர் நியமிக்காமல் மாண விகளை வேலை வாங்கியது குறித்து விசாரணை செய்வதுடன், அந்த விடு தியில் வரவு செலவு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக தணிக்கை செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட் டது. இதையடுத்து விடுதியில் உட னடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உறுதி யளித்தார். இதேபோல் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் சார்பிலும் மேற்படி பிரச்சனையில் தொடர்புடைய விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை கோரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது.