tamilnadu

இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டிற்கு 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் தகவல்

கோவை,டிச.30-  இந்தியாவில் பாம்பு கடியால் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் பேர் உயிரிழப்பதாக இங்கிலாந்து பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சக்தி வேல் தெரிவித்தார்.  கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் யுனிவர்சிட்டி ஆப் ரீடிங் உதவி பேராசிரியர் சக்திவேல் வையாபுரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படு கின்றனர். 1.5 லட்சம் பேர் உயரிழக்கின்றனர். இந்தியாவில் 50 ஆயிரம் பேர் உயிரிழக் கின்றனர்.  தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் உயிரி ழந்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்கள். பாம்பு கடி குறித்து போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இல்லாததே அதிக உயிரிழப்பிற்கு காரணம். உலகளவில் 3 ஆயிரம் வகையான பாம்புகள் உள்ளது.  இதில் 600 பாம்புகள் மட்டுமே விஷத் ன்மை கொண்டது. இந்தியாவில் 200 வகை யான பாம்புகள் இருக்கிறது. அதில் கண்ணாடி விரியன், நல்லபாம்பு, கட்டுவிரியன், சுருட்டை விரியன் பாம்புகள் கொடிய விஷம் கொண்டது.  மற்ற வகை பாம்புகளால் அதிக அளவில் பாதிப்பு இருக்காது.   பாம்பு கடித்த இரண்டு மணி நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.  ஆனால், இது குறித்து போதிய விழிப்பு ணர்வு மக்களிடையே இல்லை. முறையான சிகிச்சை அளிப்பதன் மூலமே உயிரிழப்பு மற்றும் நிரந்தர குறைபாடுகளை தவிர்க்க முடியும். பாம்புகள்  மழை காலங்களில் அதிக அளவில் உணவு தேடி வெளியே வரும். எலிகள் இருக்கும் பகுதியில் பாம்புகள்  அதிகம் இருக்கும். மனித நடமாட்டத்தை அதிர்வுகள் மூலம் தெரிந்து கொள்கிறது. அதை அறியாமல் மிதித்து விட்டாலோ அதற்கு பாதிப்பு ஏற்படும்போது பாம்புகள் மனிதனை கடிக்கிறது.  இந்தியாவில் அதிக அளவில் விவசாயம் பயிரிடப்படுகிறது. பாம்புகள் விவசாயிக ளுக்கு உதவியாக இருப்பதுடன் விவசாய நிலங்களை காப்பதில் பெரும் பங்கு வகிக்கி றது. சாரை பாம்புகள் தனது வாழ்நாளில் 6 ஆணிரம் பாம்புகளை உண்ணுகிறது. 2010 ஆண்டு ஆய்வின்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். இது  சாலை விபத்துக்கு ஈடானது. ஆனாலும்   பாம்பு கடியால் இறப்பவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் இல்லை. விஷமில்லாத பாம்புக ளால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. எனினும் விஷம் கொண்ட பாம்பு கடிக்கு விஷ  முறிவு மருந்தினை எடுத்து கொண்டு சிகிச்சை மேற்கொள்வதே உயிரிழப்புகளை தவிர்க்க வழிவகை செய்யும்.  பாம்புகள் குறித்து பள்ளி பருவத்திலேயே அறிந்து கொள்ளும் வகையில் பாட புத்தகத்தில் சேர்க்க அரசு முன்வர வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பாம்பு கடிக்குவழங்கப்படும் தொகை போதுமான அளவு இல்லாததால் அதனை இத்திட்டத்தில் முற்றிலும் இலவச மாக வழங்கிட வேண்டும். எந்த வகையான பாம்பு கடி என்பது தற்போது வரை கண்டறிய போதிய உபகரணங்கள் இல்லை. இதனை கண்டு பிடிக்க புதிய கருவியை உருவாக்கி வருகிறோம். அடுத்த ஆண்டு குறைந்த விலையில்கிடைக்கப் பெறும். இந்த கருவி மூலம் எந்த வகை பாம்பு கடித் துள்ளது என்பதை ஒரு சொட்டு ரத்தத்தின் மூலம் அதன் விஷத்தன்மையும் அறிந்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழப்புகளை குறைக்க முடியும். இவ்வாறு அவர்  தெரி வித்தார்.