tamilnadu

அதிக வரிவிதிக்கும் அமெ. முடிவுக்கு சீனா பதிலடி

பெய்ஜிங், மே 14-சீனாவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் பொருட்களு க்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதற்கு எதிராக சீனா பதிலடி கொடுத்துள்ளது.ஜுன் ஒன்று முதல் 6ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரிவிதிப்பதாக சீனா அறிவித்துள் ளது. இறக்குமதி வரியை உயர்த்தி சீனா மீது நிர்ப்பந்தம் கொடுக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு அடிபணியமாட் டோம் என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜங்ஷாங் தெரிவித்தார்.அமெரிக்காவுடன் வெள்ளி யன்று வாஷிங்டனில் நடந்த வர்த்தக பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுக்கு வர இரு தரப்பாலும் முடியவில்லை. அதைத் தொடர்ந்து 24 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களின் இறக்குமதிக்கான வரியை 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி யுள்ளது.