கோவிட்-19 சிகிச்சைக்கு, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மீண்டும் பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த மாதம், தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிகள் அதிகம் பயன்படுத்தினால், இருதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், இந்த மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்துவதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த மே 25-ஆம் தேதி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதத் தகவலை ஆய்வு செய்ததன் அடிப்படையில், மீண்டும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.