நூறுநாள் வேலை கேட்டு சுங்குவார்சத்திரத்தில் விதொச ஆர்ப்பாட்டம்!'
காஞ்சிபுரம், ஜூலை 18- நூறு நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் காஞ்சி புரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் வியா ழனன்று (ஜூன் 26) சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்றது. திருபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட காந்தூர் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் (ஏரி) வேலை வழங்க வேண்டும். உயர்த்தபட்ட கூலியை ரூ.336-ஐ தினக்கூலி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு முழுமையான நிதியை இரண்டரை லட்சம் கோடி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இருநூறு நாட்களா வேலை வழங்கி தினக்கூலி 600 ரூபாயாக வழங்க வேண்டும். என்பன பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு ஆர்.சுகுந்தன் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பா ளர் சி.சங்கர், திருப்பெரும்புதூர் பொது தொழிலாளர் சங்க நிர்வாகி ப.வடிவேலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சி.அன்பழகன், ஏ.வி.ரமேஷ், ஆர்.வினோத்குமார், எல்.விஜய், ஆர்.சரவணன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்ட னர்.