tamilnadu

img

வரலாற்றுப் போராட்டத்தின் வெற்றிக்கதை

வரலாற்றுப் போராட்டத்தின் வெற்றிக்கதை

சுதந்திரத்திற்கு முன் இந்திய தேசத்தின் விவசாய நிலங்கள் அனைத்தும் சமஸ்தானங்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகளின் கைகளிலும், கோயில்களுக்கும், பண்ணையார்களுக்கும் சொந்தமானவைகளாகவும் இருந்தன. ஆனால் அந்த நிலங்களை உழுது பயிரிடுவது முழுவதும் சாதாரண கூலித் தொழிலாளர்களும் குத்தகை விவசாயிகளும்தான். இவர்கள் கடுமையாக நிலங்களில் உழைத்து உற்பத்தியின் பெரும்பகுதியை நில உரிமையாளர்களுக்குக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் அவதிப்படும் நிலையில் இருந்தனர்.

சுதந்திரப் போரின் உச்சகட்ட நிலையில் பிரிட்டிஷ் அரசு  நிலங்களை வருவாய்த் துறையை உருவாக்கி அதன்  கட்டுப்பாட்டில் தனதாக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டது. நிலங்கள் உழுபவர்களின் கைக்கு மாற்றப்பட  வேண்டும், குத்தகை வாடகை முறையை மாற்றி நிலங்  களை தங்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பது  போன்ற கோஷங்கள் ஆங்காங்கே எழுந்தன. இக்காலத்தில்  விவசாய சங்க அமைப்புகளும் ஆங்காங்கே உருவாக்கப்  பட்டு “உழுபவனுக்கே நிலம்” என்ற கோஷங்கள் முன்வந்தன. நில உச்சவரம்புச் சட்டமும் அதன் ஓட்டைகளும் 1956 இல் மத்திய அரசு நில உச்சவரம்புச் சட்டத்தைக்  கொண்டுவந்தது. காங்கிரஸ் “நிலங்களை உழுபவனுக்கு வழங்க வேண்டும்” என்று ஏற்றுக்கொண்டதை அமல் படுத்தும் விதமாக இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் உழுபவனுக்கு நிலத்தை வழங்கும் விதத்தில் நடை முறைப்படுத்தப்படவில்லை. காரணம், காங்கிரஸின் கொள்கை பெரும் முதலாளிகளையும் நிலப்பிரபுக்களை யும் ஆதரிக்கக்கூடிய கொள்கையாக இருந்ததால் சட்டத்  தில் நூறு வகையான ஓட்டைகளை வைத்து நிலப்பிரபுக் கள் தப்பித்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இதே காலத்தில் நிலப்பிரபுக்களும் பண்ணை முதலாளி களும் தங்கள் கையிலேயே நிலத்தை வைத்துக்கொள்ளும் விதத்தில் ஏற்கெனவே நிலத்தை உழுது விவசாயம் செய்ப வர்களை வெளியேற்றுகிற விதத்தில் அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டனர். அதுவே தேசம் முழுவதும் போராட்டமாக விவசாயிகளின் நடவடிக்கையாக மாறியது.  1957-1972: பதினைந்து ஆண்டுகால மாபெரும் போராட்டம் இந்தக் காலத்தில் ஒன்றுபட்ட மாவட்டமாகிய தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் பெரும் நிலப்பிரபுக்  கள் சட்ட விதிகளை அமல்படுத்தாமல் குத்தகைதார விவ சாயிகளை வெளியேற்றுவதை தீவிரமாக மேற்கொண்டனர். முக்கிய போராட்டக் களங்கள் மதுரை பகுதி மதுரையைச் சுற்றியுள்ள நிலங்கள், மதுரை வடக்கு-தெற்கு தாலுகாக்களில் பெரும்பகுதியான நஞ்சை நிலங்களை டிவிஎஸ் பண்ணை, மதுரை நகரத்திலிருந்து வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்திருந்தனர். பொதும்பு, பாசிங்காபுரம், மிளகரனை, அதலை, குலமங்கலம், மாயாண்டிபட்டி, பொருசுபட்டி, நரசிங்கம், ஒத்தக்கடை, மேலூர் தாலுகா வில் மணப்பட்டி, கீழையூர், ரெங்கசாமிபுரம் ஆகிய பகுதி களில் வெளியேற்றங்களை தடுத்து நிறுத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் உள்ள வருசநாடு ஏரியா வில் விவசாயிகள் 30க்கு மேற்பட்ட கிராமங்களில் பத்தாயி ரத்திற்கும் மேற்பட்டவர்களை வனத்துறை வெளியேற்ற முயற்சித்ததை மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தித் தடுத்தனர். வருசநாடு பகுதியில் மண்ணூத்து கிராமத்தில் உச்சவரம்புக்கு அதிகமாக நிலங்களை வைத்திருந்த ஐயர் கவுண்டர்கள் நிலத்திலிருந்து 150க்கு மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்ற முயற்சி செய்ததை தடுத்து  நிறுத்தி பத்தாண்டுகால போராட்டத்தின் பின் அவர்களுக்கே  அந்த நிலத்தைப் பட்டா வழங்கிட நடவடிக்கை செய் யப்பட்டது. போடி ஜமீன்தார் நிலத்தில் உழவடை செய்த நூற்  றுக்கணக்கான விவசாயிகளை வெளியேற்றுவதற்கு ஜமீன்தார் எடுத்த முயற்சிகளையும் அடக்குமுறைகளையும் விவசாய சங்கம் மிகப்பெரிய போராட்டங்களின் மூலம் தடுத்து நிறுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் உச்சவரம்புக்கு அதிகமாக  சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட நிலங்களை வெளியே கொண்டுவந்து உழவடைதார்களைப் பாதுகாப்பதற்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தப்பட்டது.  போராட்டத் தலைவர்களும் வெற்றிகளும் 1957லிருந்து 1972 வரையிலான 15 ஆண்டுகால போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்கம் தலைமை ஏற்று நடத்தியது. தோழர் கே.பி.ஜானகியம்மாள் இதன் பிரதான போராளியாக, கதாநாயகியாக இருந்து களங்கள்  அனைத்துக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயி களைத் திரட்டிப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி னார். தோழர் ஜானகியம்மாளுடன் அன்றைய தமிழ்நாடு விவசாயச் சங்கத் தலைவர் ஆர்.ராமராஜ், மதுரை மாவட்டத்  தலைவர் வி.ஏ.கருப்பசாமி, அவனியாபுரம் சுப்பையா, கே.எம்.கணபதி போன்ற தோழர்கள் உடனிருந்து செயல்பட்டனர். பெரும்பகுதியான கிராமங்களில் இருந்த குத்தகை தார விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகள் அன்று  மதுரையில் இருந்த மெஜூரா கோட்ஸ் மில்லில் பணி புரிந்தனர். அதனால் கிராமப்புறத் தொழிலாளர்களால் திரட்டப்பட்டுப் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். தோழர்  ஏ.பி.பழனிச்சாமி மெஜூரா கோட்ஸ் தொழிலாளியாகப் பணிபுரிந்து சிஐடியு சங்கத்தின் தலைவராக மாறி அந்தத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் முன்னணியில் நின்றார். 1967 க்குப் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமை யில் நிர்வாகம் செயல்பட்ட காலத்தில் அடக்குமுறைகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல் இல்லை. சட்டமன்றத்தில் சிபிஐஎம், சிபிஐ எம்எல்ஏக்கள் எழுப்பிய  எதிர்ப்புக் குரல்களால் அதிகாரிகள் சற்று அடங்கினர். தற்போதைய சவால்களும் எதிர்கால நடவடிக்கைகளும் பல்லாயிரக்கணக்கான உழவடைக்காரர்கள் நிலத்தின் சொந்தக்காரர்களாக இந்த மூன்று மாவட்டங்களிலும் மாற்றப்பட்டுள்ளனர். நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு மிகப்பெரிய தியாகங்களும் ரத்தமும் சிந்தப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தில் ஓட்டைகளை உண்டாக்கி அவை களின் மூலமாக நில மோசடி செய்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இன்னும் தன் கையில் வைத்திருக் கக்கூடிய பெரும் நிலப்பிரபுக்கள், பெரும் முதலாளிகள் இந்த மூன்று மாவட்டங்களில் இன்றும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், பண்ணைபுரம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, வருசநாடு பகுதி, ராயப்பன்பட்டி, பழனி,  நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி, மதுரை குலமங்கலம் பகுதி இது போன்ற ஏராளமான பகுதிகளில் பல்லாயிரக்க ணக்கான ஏக்கர் நிலங்கள் இப்போதும் பதுக்கப்பட்டுள்ளன. இதை எல்லாம் சட்டப்படி எடுத்து நிலமில்லாதவர்கள் கையில் கொடுக்கிற நடவடிக்கைகளைத் தொடர வேண்டி யுள்ளது. அதற்கு வலுவான சங்க நடவடிக்கையும் உறுதி யான போராட்டமும் சட்டத்தின் ஓட்டைகளைக் கண்டறிந்து  அவற்றை அடைக்கிற பணிகளையும் வருகிற காலத்தில் செய்ய வேண்டும்.