சென்னை,ஏப்.8-
சென்னை -சேலம் 8வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தி யது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது அதிமுக அரசுக்கு விழுந்த பலத்த அடியாகும். விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வல ர்கள், அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் மோடி அரசின் கைப்பாவையாக உள்ள எடப்பாடி அரசு எட்டுவழிச்சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தியது. நிலத்தை வழங்க மறுத்தவர்களை அடித்து உதைத்து கைது செய்து சிறையில் அடைத்தது. நிலத்தை தரமறுத்து கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டியை யாரும் மறந்துவிடமுடியாது. இந்த திட்டத்தை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது என அரசியல் கட்சித் தலைவர்களும் தடுக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்தில் இருந்தே இந்த திட்டத்தைகடுமையாக எதிர்த்து வந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி யும் வழக்கு தொடர்ந்தவரில் ஒருவர்.கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டிருந்தனர்.அதேபோல, வனத்துறை பகுதிகளிலும் குறுக்கிடும் இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசும் வழக்கு விசாரணையின் போது உத்தரவாதம் அளித்து இருந்தது.வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்து, மரங்களை வெட்டி சாலைகளை அமைத்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என நீதிபதிகளும் கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தனர்.
அரசாணையை ரத்து செய்து அதிரடி
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் திங்களன்று (ஏப்.8) காலை தீர்ப்பளித்தனர். அதில் 8 வழிச்சாலைக் காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துசெய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்த னர். இதன் மூலம் 8 வழிச்சாலை திட்டத்தை உயர் நீதிமன்றம் ஒட்டுமொத்த மாக ரத்து செய்துவிட்டது. இந்த சாலைத்திட்டத்திற்காக மாநில அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரங் களுக்குள் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதற்கு ஏற்ப வருவாய் ஆவணங்களில் திருத்தம் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த திட்டத்தின் பாதிப்புகளை மாநில அரசு முறை யாக ஆய்வு செய்யவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 8 வழிச்சாலைத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் இழப்பு களை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் இதற்கான நிபுணர் குழு அறிக்கையில் இருந்த தவறுகளையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தேர்த லில் மக்கள் பலத்த அடி கொடுப்பார்கள் என்று தெரிந்தும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.