தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசானையில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உயர்கல்வித்துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்வாரியத் துறைத் தலைவராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நலத் துறை ஆணையராக லில்லி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூக்கு, கூடுதலாக விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி கல்வித்துறை ஆணையராக சுந்தரவல்லி ஐஏஎஸ், நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறித்துறை செயலாளராக அமுதவல்லி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜவுளித் துறையின் இயக்குனராக லலிதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத் துறை துணைச் செயலராக பவன்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனிதவள மேம்பாட்டுத் துறை செயலராக விஜயராஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.