சென்னை:
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த செமஸ்டர் தேர்வை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச்செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நோய்த்தொற்று, குடும்ப வறுமை, மன உளைச்சல், பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பிய மாணவர்கள் தனிமைப்படுத்தப் பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும். முந்தைய செமஸ்டர், இன்டர்னல், அசைன்மென்ட் தேர்வுகளின் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.