அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்புடைய ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விசாரணையை, ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.