tamilnadu

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்

சென்னை, ஜூன் 2- பள்ளி மாணவர்கள் பழைய பஸ்பாஸிலே பயணிக்கலாம் என்றுபோக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.கோடை விடுமுறைக்குப் பிறகுதமிழகம் முழுவதும் அரசு, தனியார்பள்ளிகள் ஜூன் 3 திங்கள்கிழமையன்று திறக்கப்படவுள்ளன. பள்ளிகள்திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளிமாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.  திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பஸ்பாஸில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும், சீருடை அணிந்து பயணிக்கும்மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்கவேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.