அவிநாசி, ஜூலை 3- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் வகை யில் தனியார் விளை நிலங்களில் பணியாற்று வது குறித்த கலந்துரை யாடல் மற்றும் சிறப்பு முகாம் அவிநாசியில் புதனன்று நடைபெற்றது. அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி யாளர்கள் மற்றும் விவ சாயிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகா மிற்கு ஒன்றிய ஆணையர் ஹரிஹரன் தலைமை வகித் தார். வட்டார வளர்ச்சி அலு வலர் (ஊராட்சிகள்) சாந்தி லட்சுமி, உதவிப் பொறியாளர் வெள்ளி யங்கிரி, ஒன்றியப் பொறி யாளர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் திட்ட அலுவலர் கிரி, தனியார் விவசாய விளைநிலங்களில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர் களைக் கொண்டு செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து விளக்கமளித்தார். மேலும் அவர் கூறியதாவது, பண்ணைக் குட்டை அமைத்தல், ஏரி, வரப்பு அமைத்தல், தென்னை மரங்களுக்கு பாதுகாப்பு குழி வெட்டுதல், சொட்டுநீர் பாசனப் பயிரி டுதல், தோட்டம், காடுகளைத் தூய்மைப் படுத்துதல், கால்நடைக் கொட்டகை, கோழிப்பண்ணை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கு 5 ஏக்கருக்கு உள்பட்ட விவசாயிகள் தங்கள் தோட்டம், காடுகளில் மேற்கொள்ளப்படக் கூடிய பணிகள் குறித்து அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். விவசாயிகள் கொடுக்கும் தகவலுக்கு ஏற்ற வாறு நூறு நாள் வேலைத் திட்டப் பணி யாளர்கள், விவசாய விளைநிலங்களில் பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார். இம்முகாமில், விவசாயிகள் மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்று பவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.