ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய சமூக நீதி சாசனம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் அ.செல்லகண்ணு தலைமையில் சென்னையில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதிப்புறு தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், இயக்குநர் ராஜு முருகன், தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு 5 பக்கம் பார்க்க...