சென்னை,ஏப்.22-விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறு ஆண் குழந்தையான ரோஹனின் (பெயர்மாற்றப்பட்டுள்ளது) உயிரை காப்பதற்காக ஒரு தனித்துவமான இதய மாற்றுப்பதிய அறுவை சிகிச்சையை போர்ட்டிஸ் மலர் மருத்துவமனை செய்துள்ளது.தீவிரமான இடது இதய சிற்றறை செயலிழப்புடன் விரிந்த இதய தசை நோய் ரோஹனுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது. சுவாசிக்க இயலாமல் கடும்பிரச்சனைகளோடு திரும்பத் திரும்ப மருத்துவமனையில் ரோஹனை சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டியிருந்தது. உரிய மருந்துகளை வழங்கியபோதிலும் அவனது உடல்நிலையானது முன்னேற்றம் காணவில்லை. இப்பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து இயல்புநிலைக்கு வருவதற்கு இதய மாற்றுப்பதியம் மட்டுமே ஒரே தீர்வாக இருந்ததால், இதய தானம் பெறும் சாத்தியத்திற்காக மாநிலத்தின் மாற்றுப்பதிய பதிவகத்தில் ரோஹனின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மும்பையில் இரண்டு வயதுகுழந்தை ஒன்றுக்கு சிகிச்சையின் மூலம் சரிசெய்ய இயலாதவாறு மூளையில் கடும் சேதம் ஏற்பட்டது. பின்னர் மூளைச்சாவு அடைந்த அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். அந்த குழந்தையின் இதயம் ரோஹனுக்கு பொருத்தப்பட்டது.
இதன் மூலம் மும்பையைச் சேர்ந்த அந்த சின்னஞ்சிறு குழந்தை, இந்நாட்டின் மிக இளைய, உடலுறுப்பு தானம் வழங்கிய நபர்என்ற பெருமைக்கு உரியவராக வரலாற்றில்இடம்பெற்றுள்ளது. மலர் மருத்துவமனையின் இதய அறிவியல் துறை இயக்குனர் டாக்டர். கே.ஆர். பாலகிருஷ்ணன்மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைப் பிரிவு மற்றும்இதயம் சார்ந்த உணர்விழப்பு மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர். கே.ஜி. சுரேஷ் ராவ் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தது. இந்த இதயமாற்று சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர். கே.ஆர். பாலகிருஷ்ணன், “இதயத்தை தானமாக பெறுபவர் இரண்டு வயதே ஆன சிறு குழந்தைஎன்பதால், இந்த அறுவை சிகிச்சையானது சிரமமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஆகவே, குழந்தைக்கு மாற்றுப்பதிய சிகிச்சையை செய்வதற்கு அனைத்து சவால்களையும் மிக துல்லியமாகவும், அதிக கவனத்தோடும் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. குழந்தைகளுக்கான இருதய மாற்று அறுவை சிகிச்சையில் இதுமற்றுமொரு மைல்கல் என்றார்.