tamilnadu

img

மருத்துவரின் உடல் அடக்கத்தை தடுத்த 14 பேர் மீது குண்டர் தடுப்புசட்டம்

 சென்னை, மே1- சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது தடுத்து நிறுத்தியதோடு ஆம்புலன்ஸ் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் துப்புரவு பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரை பனையம் வைத்து போராடி வரும் இந்த அசாதாரணமான சூழ்நிலை யில் மரணமடைந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தகராறு செய்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதற்கிடையே மத்திய அரசும் அவசர சட்டத்தை கொண்டுவந்தது. குடியரசுத் தலைவரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.அதைப் பின்பற்றி மாநில அரசும் கடும் எச்சரிக்கை செய்ததோடு அறிக்கையை வெளியிட்டது. இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 21 ஒருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.