சென்னை, மே 16-சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் ஹாசன் சொன்னதற்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதி பள்ளப் பட்டியில் பிரச்சாரம் செய்த போது, சுதந்திர இந்தியாவின் முதுல் தீவிரவாதி ஒரு இந்துதான். காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேதான் அந்த தீவிரவாதி என இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தூத் துக்குடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று கடுமையாக விமர்சித்தார்.அமைச்சரின் இந்த பேச்சுக்கு சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தேர்தல் ஆணையம் சென்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தனர்.இந்த புகார் மனுவில், ‘அமைச் சர் ராஜேந்திர பாலாஜி மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.