சென்னை,ஏப்.22- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவே மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.