சென்னை, பிப்.2 மனித சங்கிலியில் கலந்து கொண்டதற்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.வழக்கை திரும்பப்பெறவேண்டும் என்று அது கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப் பாளர்கள் பேரா. அருணன்(க. உதயகுமார் ஆகியோர் வெளி யிட்டுள் ள அறிக்கை வருமாறு: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் 30.1.2020 அன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற மனிதசங்கிலி இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வசந்தி மற்றும் முத்துச்செல்வி ஆகியோர் மீதும் ஆசிரியர்கள் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று கருதும் போது ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. அந்த முறையில் முப்பதாம் தேதி நடைபெற்ற மனித சங்கிலி இயக்கத்தில் இந்த பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு நேரம் முடிந்த பிறகு கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மத வெறி நோக்குடன் செயல்படும் இந்து முன்னணி யினர் தூண்டுதல் பேரில் அவர்க ளின் நிர்பந்ததிற்கு பணிந்து காவல்துறை இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அச்சுறுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக காவல்துறை இத்த கைய பழிவாங்கும் போக்கினை கைவிட்டு ஆசிரியர் மீதான வழக்கை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது.தமிழக அரசு இத்தகைய ஆசிரியர் விரோத நடவடிக்கையை கைவிட்டு அறி ஞர் அண்ணாவின் கொள்கை வழியில் நடந்திட வேண்டுமென தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.