tamilnadu

img

எம்எல்ஏ பிரபு மீதும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க தடை

சென்னை:

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அளித்த நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 


இந்த நோட்டீஸ் குறித்து ரத்தின சபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு தடை பெற்றனர். ஆனால், எம்.எல்.ஏ. பிரபு மட்டும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில், பேரவைத் தலைவர் நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளியன்று (மே 10) விசாரணைக்கு வந்தது.அப்போது அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததோடு இது தொடர்பாக ஜூலை 12ஆம் தேதிக்குள் சபாநாயகர் தனபால் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.  


இதன்மூலம், குறுக்குவழியை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் எடப்பாடி - ஓபிஎஸ் கூட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.