வாலிபர் சங்க தலைவர் அசோக் படுகொலை உட்பட தலித் மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு தீர்வு ஏற்படும் வகையில் கரை யிருப்புக்கு சாலை வசதி செய்து தர அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சக்கரம் புதுக்குளம் கிராமம் ஆர்எஸ்ஏ நகரில் வடக்கு தெருவில் வசித்து வந்த முருகன் மகன் அசோக் 12.06.2019 அன்று சாதி ஆதிக்க நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தாசில்தார், சப்கலெக்டர், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கிராம பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிபிஎம், வாலிபர் சங்கத்தினர் அடங்கிய குழுவினர் நடத்திய அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.
அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
கொலைக்குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அசோக் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் நிவாரணம் பெற்றுத் தர மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் நடவடிக்கை தொடரப்படும். மேற்படி அசோக் கொலை வழக்கில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
இறந்த அசோக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை 3 மாதத்திற்குள் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆர்எஸ்ஏ நகரிலிருந்து சிவகுமார் ஸ்பின்னிங் மில் வரை உள்ள பாதையினை ஏற்படுத்த நிலம் ஆர்ஜிதம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிதம்பர நகர் விலக்கில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பெட்டிக்கடை உடனடியாக அகற்றப்படும். கரையிருப்பு பகுதியை வன்கொடுமை தடுப்பு பகுதியாக (íttrHcity PrHbe írea) உடனடியாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து கரையிருப்பு கிராமத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.