tamilnadu

img

புதிய கல்விக்கொள்கை, ஆன்லைன் கல்வியை அமல்படுத்தக் கூடாது... மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் மாநில தலைவர் பா. ஜான்ஸிராணி தலைமையில்  ஆன்லைனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறன் மாணாக்கர்களை பாதிக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, மற்றும் ஆன்லைன் கல்வி திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை, கல் வியை கடைச்சரக்காக மாற்றும் நோக்கம் கொண்டது.  ஏழைகளுக்கு எதிரானது. 3 வயதுக்குள் கல்வி நிலையங்களில் சேர்த்துவிட வேண்டும்; 3,5,8ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கட்டாயத் தேர்வு ஆகிய அம்சங்கள் எல்லாம் மாற்றுத்திறன் குழந்தைகளை கல்வி கற்பதில் இருந்து தடுக்கும் தன்மை கொண்டது.  செவித்திறன் பாதித்த குழந் தைகளுக்கு ஏற்கனவே ஒரு மொழி மட்டுமே போதிக்கப்படும் நிலையில், மும்மொழி என சொல்வதெல்லாம் அபத்தமானது.  தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.2009 கட்டாய கல்வி உரிமை சட்டம், 2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் ஆகியவை எல்லாம் சாதாரண குழந்தைகளுடன் மாற்றுத்திறன் குழந்தைகளையும் இணைத்த உள்ளடங்கிய கல்வி திட்டத்தை வலியுறுத்தியபோதிலும், மத்திய மாநில அரசுகள் இதுநாள் வரையில் கண்டுகொள்ளாமல் புறக் கணித்துவிட்டு, புதிய கல்விக் கொள்கையில் உள்ளடங்கிய கல்வி குறித்து தெரிவித்திருப்பது வேடிக்கையானது.

ஆன் லைன் கல்வியை அமல் படுத்தப்படுவதாக சொன்னாலும், ஒரு காலாண்டு நிறைவுபெறும் இவ்வேளை வரை ஆன்லைன் கல்வி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு எட்டவில்லை. எனவே, இக்கல்வி முறை சமமாகவும், மாற்றுத்திறன் குழந்தைகளை பாதுகாப்பதாகவும் இருக்காது என்பதால் ஆன்லைன் கல்வியை அமல்படுத்தக் கூடாது.சட்டம் அங்கீகரித்துள்ள 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் பொதுப்பள்ளிகளையே நம்பி இருப்பதால், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி முறையை ஒழுங்காற்றுதல் செய்ய, மாநில பள்ளி கல்வித் துறையின் கீழ் முழுமையாக மாற்றி, இதற்காக தனி ஆணையம் உருவாக்க வேண் டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சங்கத் தின் தலைவர் பா.ஜான்ஸிராணி, பொதுச்செயலாளர் நம்புராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.