சென்னை, ஜூன் 26- தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 30 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கை யின்போது, துறை சார்ந்த புதிய அறி விப்புகள், நிதி ஒதுக்கீடு, புதிய சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக் கப்படவுள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிப்புகளாக வெளியிடப்படும். இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக ஆலோ சனை நடத்துவதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 28 அன்று நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல் வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 28 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனை வரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.