tamilnadu

தனியார் நிறுவன ஊழியர் கொலை: 6 பேர் கைது

சென்னை, ஏப். 20-சென்னை அருகே உள்ள நாகல்கேணி ஆதாம்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் க.சீனிவாசன் (45). இவர் அப் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோல் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சீனிவாசன் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர், திருநீர்மலை பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வந்த மோட்டார் பைக் சீனிவாசன் மீது லேசாக இடித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சீனிவாசனுக்கும், பைக்கில் வந்த சில பேருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து பைக்கில் வந்த நபர்கள், செல்போன் மூலம் மேலும் சில நபர்களை அங்கு வரவழைத்தனர். பிரச்னை முற்றவே அவர்கள், சீனிவாசனை கற்கள்,இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் பலத்தக் காயமடைந்த சீனிவாசன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து சங்கர்நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வே.விஜய் (24), அதேப் பகுதியைச் சேர்ந்த ச.விஜய் (23),சே.சூர்யா (24),வ.ஆனந்த் (24),மா.கண்ணன் (24),ச.டில்லிபாபு (23), மணிமங்கலம் பாரதிநகரைச் சேர்ந்த பா.பார்த்திபன் (25) ஆகிய 7 பேரை சனிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.